திருப்பூர் மசாஜ் சென்டரில் விபசாரம் - போலீசாரை கண்டதும் தப்பியோடிய ஜோடிகள்

அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.போலீசார் கதவை தட்டி உள்ளே இருந்தவர்களை அழைத்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

விபசாரம் :

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு சென்றனர். அப்போது அங்குள்ள அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே 2 இளம்பெண்கள், 2 ஆண்கள் சென்றதாக அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கதவை தட்டி உள்ளே இருந்தவர்களை அழைத்தனர். ஆனால் கதவை திறக்கவில்லை. அப்போது அந்த அறையில் பின்புற கதவு இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் பார்த்தபோது அறைக்குள் யாரும் இல்லை. சொகுசு படுக்கைகள் இருந்தன.

தப்பியோட்டம்

போலீசார் வருவதை அறிந்ததும் 4 பேரும் பின்புறம் வாசல் வழியாக தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தை வாடகைக்கு விட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருப்பூரில் ஸ்பா என்ற பெயரில் சிலர் விபசாரம் நடத்தி வருகின்றனர்.சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு தினமும் இளம்பெண்கள், இளைஞர்கள் வருகின்றனர். அவர்கள் காரை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு வருகின்றனர். மசாஜ் சென்டருக்குள் செல்லும் அவர்கள் அரை மணி நேரம் கழித்து திரும்புவார்கள். எனவே விபசாரம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com