ஆண்டிப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

திருப்பூர் ஆண்டிப்பாளையம் மற்றும் சி.ஜி.புதூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் நாளை மின்தடை. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் ஆண்டிப்பாளையம் துணைமின் நிலையம் மற்றும் சி.ஜி.புதூர் துைண மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டன்புதூர், குளத்துப்புதூர், செந்தில் நகர், ஜான் ஜோதி கார்டன், ராஜகணபதி நகர், சின்னாண்டிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர், சுல்தான்பேட்டை, முத்துநகர், லிட்டில் பிளவர் நகர், இடுவம்பாளையம், மகாலட்சுமி நகர், வஞ்சிபாளையம், கார்த்–திக் நகர், கே.என்.எஸ்.நகர், அண்ணா நகர், ஜீவாநகர், அம்மன் நகர், செல்லம்நகர், குறிஞ்சிநகர், 60 அடி ரோடு, ஆண்டிபாளையம், என்.சி.சி. வீதி, தனலட்சுமி நகர், நாச்சம்மாள் காலனி, வீனஸ்கார்டன் பகுதிகளில் மின்வினியோகம் தடைபடும்.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com