காங்கயத்தில் ஆபத்தான நிலையில் மின் கம்பம்

கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு பழுதடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
பழுதடைந்த மின்கம்பம்.
பழுதடைந்த மின்கம்பம்.
Published on

முத்தூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம், சென்னிமலை சாலை, புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் தற்போது பழுதடைந்த நிலையில், கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

அப்பகுதியில் வீடுகள் அதிகம் உள்ளதாலும், மழைக்காலம் என்பதாலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு பழுதடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பத்தை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com