ஊத்துக்குளி பகுதியில் நாளை மின்தடை

பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஊத்துக்குளி

ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஜயமங்கலம், பகளாயூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், மு.தொட்டிபாளையம், புத்தூர்பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com