அவினாசி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி லிங்கே ஸ்வரர் கோவிலில் இருந்து பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

அவிநாசி :

அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீ அரசமரத்து விநாயகர் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது.இதற்காக அவிநாசி லிங்கே ஸ்வரர் கோவிலில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன்பின், அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இரவு படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா வருதல், மறுபூஜையூடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெற்றது. விழாவை முன்னி ட்டு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com