பல்லடம் அருகே அம்மனுக்கு பொங்கல் பூச்சாட்டு விழா

முளைப்பாரி ஊர்வலம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பொங்கல் பூச்சாட்டு விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்ற காட்சி.
பொங்கல் பூச்சாட்டு விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்ற காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில், மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன், மாகாளியம்மன், முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இந்த நிலையில், அந்தக் கோயிலில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில் முளைப்பாரி ஊர்வலம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com