விநாயகர் சதுர்த்தி விழா திருப்பூரில் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் போலீசார் ஆய்வு

விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு, விசர்ஜனம் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 5 நாட்களுக்கு இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து இயக்கங்களின் சார்பில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு, விசர்ஜனம் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

இதுதொடர்பாக, முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக விசர்ஜனம் ஊர்வலம் வரும் பகுதிகளான கொங்கு மெயின் ரோடு, வெள்ளியங்காடு, செல்லம்நகர் மற்றும் ஒன்று திரளும் இடமான புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களை திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் குறித்த விபரம், இதற்கு முன் அந்த எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள், பதட்டமான பகுதிகள் என அனைத்தையும் கேட்டறிந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com