பல்லடத்தில் 7500 பனை விதைகள் நடும் விழா

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் பனை விதைகள் நடும் காட்சி.
மாணவர்கள் பனை விதைகள் நடும் காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் பூமியில், பணிக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம், வனம் இந்திய அறக்கட்டளை.

மற்றும் பொதுமக்கள் இணைந்து 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 7500 பனை விதைகள், 750 மாணவர்கள் மூலம் நடும் விழா நடைபெற்றது.இதில் பணிக்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரோஜா மணி ஈஸ்வரன், வனம் அமைப்பின் நிர்வாகிகள் சுந்தர்ராஜன்,நாச்சிமுத்து, டி.எம்.எஸ்.பழனிச்சாமி, மற்றும் அருள்புரம் ஜெயந்தி பள்ளி மாணவர்கள், பணிக்கம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com