தெக்கலூரில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டம்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவிநாசி :

அவிநாசி அடுத்த தெக்கலூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் நலச் சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் பார்த்திபன் பொருளாளர் குமாரசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விசைத்தறி தொழிலுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நாளை 16-ந்தேதி, கோவை, எஸ்.என்.ஆர்., கல்லூரி வளாகத்தில், நடைபெற உள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com