விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உதவிகள்

திருப்பூர் பகுதிகளில் ஆதரவின்றி சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு போர்வை வழங்கப்பட்டது. குளிர்காலம் தொடங்கியதையடுத்து சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவி செய்திட நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில்  சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உதவிகள்
Published on

திருப்பூர் : 

குளிர்காலம் தொடங்கியதையடுத்து சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவி செய்திட வேண்டுமென நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி திருப்பூர்வடக்கு மாவட்ட தொண்டர் அணி தலைமை மாவட்டத் தலைவர் எஸ். குத்புதின் தலைமையில் திருப்பூர் பகுதிகளில் ஆதரவின்றி சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு போர்வை வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சின்னதுரை, மாவட்ட துணைத்தலைவர்கள் அலாவுதீன், ஜெயபிரகாஷ் ,மாவட்ட செயற்குழு கனகராஜ், சித்திக்,மாஸ்டர் பாய், நாகராஜ் மற்றும் காங்கேயம் நகர தொண்டரணி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் அங்கு ராஜ், மாரிமுத்து, மணிகண்டன் ,விவேக் ,வெங்கடேஷ் ,கார்த்திகேயன், மாயவன் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com