விபத்தில் வடமாநில தொழிலாளி பலி

வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க கணவன்- மனைவி இருவரும் வந்துள்ளனர்.கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக் விஸ்வகர்மா(வயது 50). இவர் கோடங்கி பாளையம் கல்குவாரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க கணவன்- மனைவி இருவரும் வந்துள்ளனர். பின்னர் மனைவியை பஸ்சில் அனுப்பி வைத்துவிட்டு, வேறொரு தொழிலாளியுடன் மோட்டார் சைக்கிளில் லட்சுமி மில் பகுதியில் இருந்து கோடங்கிபாளையம் நோக்கி சென்றார்.

ஆறாகுளம் பிரிவு அருகே உள்ள பேக்கரியில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். அங்கு டீ குடித்துவிட்டு தீபக் விஸ்வகர்மா மட்டும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த தீபக் விஸ்வகர்மா உயிரிழந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com