வட மாநில தொழிலாளி தற்கொலை

வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். அக்கம் - பக்கத்தினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மதுசூதன் பிரதான் என்பவரது மகன் தவன்குமார் பிரதான்( வயது 26) .இவர் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் தனியார் மில்லில் வேலை பார்த்துக் கொண்டு, அதே பகுதியில் வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாயார் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து மன வேதனையில் இருந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளியே சென்று இருந்த அவரது மனைவி சுமித் ஜனா, வீட்டிற்கு திரும்பிய போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் - பக்கத்தினர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சுமித் ஜனா கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com