வடமாநில தொழிலாளி தற்கொலை

கோழிப்பண்ணையில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்தார்.தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுவராஜ்(வயது 18). இவர் பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கோழி பண்ணையில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சுவராஜ் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com