மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய வாலிபர் கைது2 அழகிகள் மீட்பு

மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது. இந்த சென்டரில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொங்கு நகர் உதவி போலீஸ் கமிஷனர் அனில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

அங்கிருந்து மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டர் நடத்தி வந்த திருப்பூர் பி.என். ரோடு பகுதியை சேர்ந்த மோகன் (வயது 30) என்பவரை வடக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com