கோப்புபடம்.
உள்ளூர் செய்திகள்
போலி மதுபாட்டில் தயாரித்த வாலிபர் கைது
போலீசார் வழக்குப்பதிவு செய்து கருமலையப்பனை கைது செய்ததோடு 4 போலி மதுபாட்டில்களையும் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
உடுமலை:
உடுமலை அருகேயுள்ள மலையாண்டிபட்டினத்தை சேர்ந்தவர் கருமலையப்பன் (வயது33) . இவர் தனது வீட்டில் 202 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து அங்கு சென்ற உடுமலை போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அப்போது மூடி திறந்திருந்த 4 பாட்டில்களில் மதுவுக்கு பதிலாக கூடுதல் போதைக்காக நெடி மிகுந்த திரவம் கலந்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருமலையப்பனை கைது செய்ததோடு 4 போலி மதுபாட்டில்களையும் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

