

வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் கரூர், திருச்சி, ஈரோடு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மூலனூர், தாராபுரம் ரோடு, புதிய பஸ் நிலைய பகுதிகள் ஆகியவற்றை கண்காணிக்க 8 ‘சிசிடிவி’ கேமரா உட்பட உபகரணங்கள் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில், தனியார் நிறுவனத்தினரால் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
கடைவீதி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஏதேனும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றால் குறிப்பிட்ட நேரத்தை கணக்கிட்டு வாகனத்தை பிடிக்க முடிந்தது. ஆனால் சட்டமன்ற தேர்தல் நடந்தபோது கேமராக்கள் பழுதானது.
ஆனால் இன்னும் சீரமைக்கவில்லை. போலீசார் கூறுகையில், ‘’கடைவீதி கார்னரில், நான்கு கேமராக்கள் சேதமடைந்த போது தேர்தல் பணியில் இருந்ததால் கண்டுகொள்ளவில்லை. நன்கொடையாளர்கள் முன் வந்தால் உடனடியாக இயக்கத்திற்கு கொண்டு வந்துவிடலாம் என்றனர்.