பிற மாவட்டங்களில் இருந்து உடுமலை சந்தைக்கு வரும் வாழைத்தார்கள்

உள்ளூர் வரத்து இல்லாததால் உடுமலை சந்தைக்கு பிற மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதியில் நீர் வளம் அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் குறைந்த பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஏழு குள பாசன பகுதிகளில் இச்சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இப்பகுதியில் இலை வாழை ரகங்களையே அதிக அளவு சாகுபடி செய்கின்றனர்.

இதனால் பிற ரகங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும், பூவன், கற்பூரவள்ளி, செவ்வாழை, கதளி உட்பட ரகங்கள், பிற மாவட்டங்களில் இருந்தே உடுமலை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 

தற்போது, தூத்துக்குடி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து  கதளி வாழைத்தார் வரத்து உடுமலைக்கு அதிகரித்துள்ளது. வாழைத்தார், ரூ. 300-500 வரை விற்பனையாகிறது. வடகிழக்கு பருவமழைக்கு பிறகு உடுமலை பகுதியிலும் வாழை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. எனவே வரும் சீசன்களில் வாழைத்தார் விலை சீராக இருக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com