

அவினாசி:
அவினாசியில் பென்சனர் தின விழா நடந்தது. வட்டாரத் தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநிலபொருளாளர் ராமசாமி, பொதுச் செயலாளர் தங்கராசா, தலைமை நிலைய செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அகில பாரத மூத்த குடி மக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பு மாநிலத்தலைவர் ராஜா இயக்கப் பேரூரையாற்றினார். பணி நிறைவு ஆசிரியர் காளியப்பன் ஏற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அவினாசியில் உள்ள சீடு இல்லத்தில் உள்ள மூத்தக் குடிமக்கள் 10 நபர்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடை வழங்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதியின்படி 70 வயது நிறைவடைந்த பென்சனர், குடும்ப பென்சனர்களுக்கு 10 சதவீத கூடுதல் பென்சன் வழங்க வேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே நடைமுறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.