உடுமலை நகராட்சி - பேரூராட்சிகளில் 153 வாக்குச்சாவடிகள்

கணியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், 2,913 ஆண்கள், 3,219 பெண்கள், திருநங்கைகள் ஒருவர் என 6,133 வாக்காளர்கள் உள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகளில் 27 ஆயிரத்து 901 ஆண்கள், 29 ஆயிரத்து 573 பெண்கள் மற்றும் திருநங்கைகள் 8 பேர் என 57 ஆயிரத்து 482 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 64 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொமரலிங்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள், 6,260 ஆண்கள், 6,632 பெண்கள், திருநங்கைகள் ஒருவர் என 12,893 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 17 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கணியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், 2,913 ஆண்கள், 3,219 பெண்கள், திருநங்கைகள் ஒருவர் என 6,133 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 15 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சங்கராமநல்லூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.

4,790 ஆண்கள், 4,877 பெண்கள் என 9,677 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 15 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மடத்துக்குளம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 10ஆயிரத்து 155 ஆண்கள், 10 ஆயிரத்து 409 பெண்கள்,  திருநங்கைகள் 3 பேர் என 20 ஆயிரத்து 567 வாக்காளர்கள் உள்ளனர். 

இங்கு 25 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தளி பேரூராட்சியில் 17 வார்டுகளில் 2,910 ஆண்கள், 3,073 பெண்கள், திருநங்கைகள் 1 என 5,984 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 17 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

உடுமலை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வரும் 19-ந்தேதி வாக்காளர்கள் ஓட்டளிக்க 153 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளுக்கு எண்ணிடுதல், வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

உடுமலை நகராட்சியில் பதிவாகும் ஓட்டு பதிவு எந்திரங்கள், உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிற 22-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதேபோல் கணியூர், கொமரலிங்கம், மடத்துக்குளம், சங்கராமநல்லூர், தளி பேரூராட்சிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை மையமாக மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

5 பேரூராட்சிகளில் ஓட்டுப்பதிவுக்கு பின் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு பேரூராட்சிக்கும் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படும். வரும் 22-ந் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com