உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.உடுமலை நகர மன்றத்தலைவர் மு.மத்தீன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.
பட்டமளிப்பு விழா நடைபெற்ற காட்சி. 
பட்டமளிப்பு விழா நடைபெற்ற காட்சி. 
Published on

உடுமலை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துனர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்றவைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி.என்.சி. மெஷின் - டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின் போதே தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய-மாநில அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நடப்பாண்டில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் என்.வி.நதிச்சந்திரன் தலைமை தாங்கினார். வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குணசேகரன் முன்னிலை வகித்தார். பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக உடுமலை நகர மன்றத்தலைவர் மு.மத்தீன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள். இதில் அதிகாரிகள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் உதவி பயிற்சி அலுவலர் மாரிமுத்து நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com