

திருப்பூர்:
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி14-ந்தேதி புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாக கல்லூரி வளாகத்தில் முதல்வர் கிருஷ்ணன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் படத்திற்கு மெழுகு வர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர், பிறகு மலர் அஞ்சலியும், மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் செய்திருந்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.