வினாடி - வினா போட்டியில் திருப்பூர் மாணவர்கள் முதலிடம்

அம்மாபாளையம், ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியை சேர்ந்த சூர்யா பகவதி, விநாயக ஸ்ரீராம் இருவரும் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தினர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டியை நடத்தியது. ஒரு குழுவிற்கு இரண்டு மாணவர்கள் வீதம், அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 76 குழுவினர் கல்வி மாவட்ட அளவிலான போட்டியில் முதலில் பங்கேற்றனர்.

இதில் தேர்வான 12 அணிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இறுதிச்சுற்றுகளில் கலந்து கொண்டனர். தேர்தல், பொது அறிவு, கல்வி சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டது.

அம்மாபாளையம், ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியை சேர்ந்த சூர்யா பகவதி, விநாயக ஸ்ரீராம் இருவரும் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தினர். அவர்களை மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com