திருப்பூர் காந்திநகர்: ஏ.வி.பி., பள்ளியில் மாசில்லா தீபாவளி கொண்டாட்டம்

திருப்பூர் காந்திநகர் ஏவிபி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாசில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார் .
ஏ.வி.பி. பள்ளியில் மாசில்லா தீபாவளி கொண்டாடப்பட்ட காட்சி. 
ஏ.வி.பி. பள்ளியில் மாசில்லா தீபாவளி கொண்டாடப்பட்ட காட்சி. 
Published on

திருப்பூர்:

திருப்பூர் காந்திநகர் ஏவிபி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாசில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது .

ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் லட்சுமி பூஜை வழிபாடு செய்து கார்த்திகை தீபங்களை ஏற்றி ஒளிபரவச் செய்தும் வண்ணமலர்களால் பள்ளியை அலங்கரித்தும் தீபத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும் மாணவர்கள் தீபத்திருநாளை கொண்டாடும் முறைகளை விளக்கும் நாடகங்களையும் நடனங்களையும் நிகழ்த்தி மகிழ்வித்தனர். முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார் . பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார். கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் நித்யா ஒருங்கிணைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com