

வாக்காளர் ஓட்டுகள் கைகொடுத்தால் சுயேட்சையாக போட்டியிடுபவரும் உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் வெல்ல வாய்ப்புண்டு. கடந்த 2011-ல் நடந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 60 வார்டுகளில் 153 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதிகபட்சமாக 44-வது வார்டில் 10 பேர் சுயேட்சையாக போட்டியிட்டனர். இந்த வார்டில் 18 பேர் போட்டியிட்டனர். கட்சி வேட்பாளர்களை விட சுயேட்சை எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
16 வார்டுகளில் தலா ஒருவர் மட்டும் சுயேட்சையாக போட்டியிட்டார். 7 வார்டுகளில் ஒரு சுயேட்சை கூட போட்டியிடவில்லை. இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட 20-வது வார்டில் 7 கட்சி வேட்பாளர், 6 பேர் சுயேட்சை என 13 பேர் போட்டியிட்டனர்.
வார்டு கிடைக்காத அதிருப்தியில் உள்ள கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்பு அதிகம். கடந்த முறை போட்டியிட்டதை விட நடப்பு தேர்தலில் அதிகமாக சுயேட்சை போட்டியிடுவார்களா? அல்லது குறைந்து விடுவார்களா? என்பது 4-ந் தேதி வேட்பு மனுதாக்கல் நிறைவில் தெரிய வரும்.