திருமுருகன் பூண்டி கோவிலில் சூரியஒளி மின்சார வசதி

உயர் கோபுர மின் விளக்கு அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. கோவிலுக்கு வேண்டிய மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

திருமுருகன்பூண்டியில் புகழ்பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க நீலகிரி எம்.பி ராசா, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.உயர் கோபுர மின் விளக்கு அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுபோல் கோவில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி பக்தர்கள் பங்களிப்பில் கோவில் கர்ப்பகிரகம், சன்னதி, மண்டப உட்பகுதி உள்ளிட்டவற்றில் 16 சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.8 லட்சம் ரூபாய் செலவில் சோலார் மின் தகடு அமைக்கப்பட உள்ளது. கோவிலுக்கு வேண்டிய மின்சாரத்தை இதன் மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com