

திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெறாததால் பொதுமக்கள் புகார் பெட்டிகளில் தங்களது மனுக்களை போட்டு சென்றனர். மனு அளிக்க வந்த பொதுமக்களை போலீசார் சோதனை செய்த பிறகு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்கள் கொடுக்க வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்வதற்காக வளாகத்தில் இலவச பேட்டரி வாகனம் இயக்கப்பட்டது. அதில் மனு அளிக்கும் இடம் வரை முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அழைத்து செல்லப்பட்டனர்.