குறைந்தபட்ச ஊதியம் ரூ.21ஆயிரம் - தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும். பொதுத்துறை பங்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

அனைத்து பனியன் சங்கங்களின் கூட்டம், சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் தலைவர் மூர்த்தி தலைமையில் நடந்தது. தொழிற்சங்க நிர்வாகிகள், சேகர் இசாக் (ஏ.ஐ.டி.யு.சி.,), பாலசுப்பிரமணியம், பூபதி (எல்.பி.எப்.,), சிவசாமி (ஐ.என்.டி.யு.சி.,), முத்துசாமி, கவுதம் (எச்.எம்.எஸ்.,), சம்பத், மனோகரன்(எம்.எல்.எப்.,) பங்கேற்றனர்.8  மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும்.

சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும். பொதுத்துறை பங்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும். மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும், மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோரிக்கையை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம், 28, 29-ந் தேதிகளில் நடக்கிறது. போராட்டத்தை, திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com