திருப்பூர் அருகே மூடப்பட்ட அம்மா கிளினிக்கை உடனே திறக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

தொரவலூர், வள்ளிபுரம், மேற்குபதி ஆகிய ஊராட்சி பகுதி பொதுமக்கள் தினசரி 40 முதல் 50 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் அடுத்த தொரவலுலூர் ஊராட்சியில் செயல்படாமல் இருந்த கால்நடை மருத்துவமனை கட்டடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. 

அதனை பெருமாநல்லூர் ரோட்டரி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து ஏழு லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து கிளீனிக்குக்கு தேவையான கட்டில், மெத்தை, டேபிள், சேர் உள்ளிட்ட மருத்துவ உபகரண பொருட்களை வாங்கி கொடுத்தனர்.

தொரவலூர், வள்ளிபுரம், மேற்குபதி ஆகிய ஊராட்சி பகுதி பொதுமக்கள் தினசரி 40 முதல் 50 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அம்மா மினி கிளீனிக் பூட்டப்பட்டு செயல்படாமல் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com