தளிரோடு விரிவாக்கப்பணி - விரைந்து முடிக்க வலியுறுத்தல்

ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.தனியாரிடமிருந்து நிலங்களும் தானமாக பெறப்பட்டன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

உடுமலை நகரின் பிரதான வழித்தடமாக தளிரோடு உள்ளது. குறிப்பாக திருமூர்த்திமலை, அமராவதி, மூணாறு என சுற்றுலாத்தலங்கள் மட்டுமின்றி அதிகப்படியான கிராமங்களை இணைக்கும் வகையில் இந்த ரோடு அமைந்துள்ளது.

நகரின் மையப்பகுதியில் செல்லும் இந்த ரோட்டோரத்தில் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. அவ்வகையில் இந்த ரோட்டில் வாகனங்களின் இயக்கம் அதிகரித்ததால் நெரிசலை தவிர்க்கும் வகையில் விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கென ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தனியாரிடமிருந்து நிலங்களும் தானமாக பெறப்பட்டன. இருப்பினும் இதுவரை விரிவாக்கப்பணி முழுமை பெறாமல் உள்ளது. 

இதேபோல் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து, அரசு கலைக்கல்லூரி ரோடு சந்திப்பு வரை, வலப்புறமாக, 10 மீட்டர் தூரத்திற்கு ரோடு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் ரோடு விரிவாக்கப்பணியை விரைந்து செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:

துறைரீதியான அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே ரோடு விரிவாக்கப்பணி முழுமைபெறும். அதேபோல் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து, அரசு கலைக்கல்லூரி ரோடு சந்திப்பு வரை, வலப்புறமாக ரோடு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.

அங்குள்ள மின்கம்பங்களை அகற்றி மாற்றியமைக்க மின்வாரியத்திற்கு உரிய தொகையை செலுத்திய நெடுஞ்சாலைத்துறை மீண்டும் திரும்பப்பெற்றது. அங்கும் விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை நகராட்சி, மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com