வாடகை கட்டிடத்தில் ஆலயம்-சிவசேனா கட்சி புகார்

தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து எவ்வித அனுமதியும் இன்றி ஆலயமாக மாற்றியுள்ளதற்கு சிவசேனா கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகில் செயல்பட்டுவரும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த கிறிஸ்தவ அமைப்பினர் அதனை ஆலயமாக  மாற்றி அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாநகரின் மையப்பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து எவ்வித அனுமதியும் இன்றி ஆலயமாக  மாற்றியுள்ளதற்கு சிவசேனா கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர போலீசாருக்கு மனு அனுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com