அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களை பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கை குறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர், காங்கயம் ரோடு போக்குவரத்து பணிமனை முன் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில்  கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மண்டல துணைத்தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். 

மண்டல தலைவர் மோகன்ராம், மண்டல பொது செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அரசு தாமதிக்காமல் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை இறுதி செய்ய சங்கங்களை அழைத்து பேச வேண்டும். 

ஓய்வூதியதாரர்களுக்கு 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். 

மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இறந்த போன தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பண பயன் வழங்க வேண்டும். 

2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களை பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கை குறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com