முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் தொடக்கம்

கடந்த 2 வார காலமாக எள் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முத்தூர் நகர சுற்றுவட்டார மற்றும் ஈரோடு, கரூர் மாவட்ட கிராமப்பகுதிகளில் கடந்த 2 வார காலமாக எள் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதனால் முத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூடததில் எ ள் ஏலம் தொடங்கி நடத்திட தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேளாண் மற்றும் விற்பனை வணிகத்துறை மூலம் அனுமதி வழங்கியது.

இதன்படி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 22 சிவப்பு ரகம் அடங்கிய எள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் டெண்டர் முறையில் நடைபெற்ற ஏலத்தில் சிவப்பு ரக எள் அதிகபட்சமாக ரூ.102.65 -க்கும், குறைந்தபட்சமாக ரூ.81.60- க்கும் ஏலம் விடப்பட்டது. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 402 ஆகும்.

மேலும் 11 ஆயி–ரத்து 866 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. இதில் 1 கிலோ தேங்காய் அதிக–பட்ச விலையாக ரூ.26.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.15-க்கும், ஏலம் விடப்பட்டது.

மேலும் 44 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.87.15-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 1,677 தேங்காய்களும், 15 தேங்காய் பருப்பு மூட்டைகளும் குறைவாகவே கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய் 1 கிலோவிற்கு கடந்த வார அதே விலையிலும், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு 40 பைசா குறைவாகவும் விவசாயிகளுக்கு கிடைத்தது.

மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் கடந்த 9 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 7 டன் அளவில் மொத்தம் ரூ‌.3 லட்சத்து 31 ஆயிரத்து 524-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது. இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com