மருத்துவமனை சுகாதார பணியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

முன் அனுபவம் உள்ளோருக்கு முன்னுரிமை. மாதம் 8500 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள மருத்துவமனை சுகாதார பணியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சியில், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தில் மருத்துவமனை சுகாதார பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதில் உள்ள நான்கு பணியிடங்களுக்கு பின் வரும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளோருக்கு முன்னுரிமை. மாதம் 8500 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். வருகிற ஏப்ரல் 10-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை, மாநகராட்சி நலச்சங்கம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களை மாநகராட்சி அலுவலகம், தேசிய நகர்ப்புற சுகாதார திட்ட பிரிவில், அலுவலக வேலை நேரத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com