திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் தேர்வு

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 பேர் ஆதரவுடன் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம் துணை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம்.
துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அக்கட்சியை சேர்ந்த எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம் துணைமேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் தேர்தலுக்கான மனு தாக்கல் நடைபெற்றது.

இதில் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 

இதனால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 பேர் ஆதரவுடன் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம் துணை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அவருக்கு  கவுன்சிலர்கள், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com