கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32, இதர பிரிவினருக்கு 37 ஆகும்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

தாராபுரம்:

தாராபுரம் வட்டாரத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு நேரடி நியமனத் தோ்வு செய்யும் பொருட்டு, தகுதியான நபா்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாராபுரம் வட்டாட்சியா் ஜெகஜோதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தாராபுரம் வட்டாரத்தில் தாராபுரம் தெற்கு, கிளாங்குண்டல், பொன்னிவாடி, நஞ்சைத் தலையூா், அரிக்காரன்வலசு, புதுப்பை ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள 6 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 21 ஆகும். அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32, இதர பிரிவினருக்கு 37 ஆகும். மாற்றுத் திறனாளிகள் நிா்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்குமேல் 10 ஆண்டுகள் வரை வயது வரம்புக்கு மேல் சலுகை உடையவா் ஆவா்.விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தாராபுரம் தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.தகுதியான நபா்கள் இணையதள முகவரியில் நவம்பா் 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com