அவினாசி அருகே சாமி சிலைகள் மாயம் - போலீசார் அதிரடி விசாரணை

புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் இல்லாததால் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் அய்யம்பாளையம் கிராமத்தில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த வேப்பமரத்தின் கீழ் சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை இருந்ததாகவும், யாரோ மர்ம நபர்கள் வேப்பமரத்தை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்த சாமி சிலைகளை திருடி சென்றுவிட்டதாக இந்து மக்கள் அனுமன் சேனா மாநில செயலாளர் தியாகராஜன்உள்ளிட்ட சிலர் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் இல்லாததால் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் மற்றும் அவினாசி போலீசார் பிரச்சினைக்குரிய இடத்தில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் நிலத்தை தோண்டி சிலைகளை தேடும் பணி மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால் அய்யம்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com