மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

தமிழ் மொழியை காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் தலைமையில் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி.நாகராஜ், தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மொழியை காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. 

மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் துரைசாமி மற்றும் மாநில, மாவட்ட, பகுதி கழக, அனைத்து அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com