மாதப்பூரில் அழுகிய நிலையில் முட்டைகள்-துர்நாற்றம்

ரோட்டோரங்களில் அழுகிய நிலையில் முட்டைகள் குவியல் குவியிலாக கொட்டப்பட்டு வருகிறது.அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ரோட்டடோரங்ளில் அழுகிய நிலையில் கொட்டப்படும் முட்டைகள்.
ரோட்டடோரங்ளில் அழுகிய நிலையில் கொட்டப்படும் முட்டைகள்.
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் சுங்கச்சாவடி அருகில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரங்களில் அழுகிய நிலையில் முட்டைகள் குவியல் குவியிலாக கொட்டப்பட்டு வருகிறது.

மேலும் அங்கு பல்வேறு கழிவுகளும் வீசப்படுவதால் அந்த வழியே செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த அழுகிய முட்டைகள் அருகில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து வீசப்படுகிறதா? அல்லது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகங்களில் இருந்து கொண்டு வந்து போடுகின்றனரா? என்பது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com