உடுமலை பகுதியில் அதிகரிக்கும் சாலையோர கடைகள் - அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்களா?

பதிவு மற்றும் உரிமம் இன்றி உணவகங்கள் செயல்படுவதாகவும், உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த உணவு பாதுகாப்பு துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

உடுமலை மார்க்கமாக சுற்றுலா தலங்களுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தவிர கனரக வாகனங்களும் இயக்கப்படுவதால் உடுமலை முக்கோணம் இடையிலான சாலையில் சாலையோர கடைகள் பெருகி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு ஏற்றாற்போல் சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகின்றன.

பதிவு மற்றும் உரிமம் இன்றி உணவகங்கள் செயல்படுவதாகவும், உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த உணவு பாதுகாப்பு துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது: 

குறைந்த விலையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் தரம் நிறைவாக இருக்க வேண்டும். சிலர் பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

அதில் தயாரிக்கப்படும் உணவால் அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது. அனுமதி பெற்றாலும் தரமான உணவு பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். அனுமதியின்றி செயல்படும் சாலையோர கடைகளிலும் ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com