உடுமலை தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டிடத்தை திறக்க கோரிக்கை

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மாற்றப்பட்டால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பயனடைவர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவு களில் கல்வி பயின்று வருகின்றனர். கட்டிட வசதி இல்லாத நிலையில் கொழுமம் ரோட்டிலுள்ள தனியார் கட்டிடத்தில் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.

அதேநேரம், புதிய கட்டிடம் கட்ட அரசால் 5.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு கலைக்கல்லூரி எதிரே இடம் தேர்வு செய்யப்பட்டது. அவ்வகையில் தற்போது வகுப்பறைகள், ஆய்வகம், தங்கும் விடுதி உள்ளிட்ட கட்டுமானங்கள் பெருமளவு நிறைவடைந்த நிலையில் புதுப்பொலிவுடன் கட்டிடம் காணப்படுகிறது.

இந்நிலையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மாற்றப்பட்டால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பயனடைவர் எனவும், புதிய கட்டிடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com