கோப்புபடம்
கோப்புபடம்

டெங்கு தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுகோள்

நல்ல தண்ணீரில்தான் டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியாகிறது.
Published on

அவினாசி:

கொசுவை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வு அவசியம் என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து அவினாசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி கூறியதாவது:

டெங்கு பாதிப்புள்ள பகுதிகளுக்கு மருந்து தெளித்து தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில்தான் டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியாகிறது. பல வீடுகளில் தண்ணீரை மூடாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் கொசுக்கள் உற்பத்தியாகின்றது. 

தண்ணீரை மூடிவைக்க வேண்டும். மேலும் தேவையற்ற பாத்திரங்கள், வாகனங்களின் டயர்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகிறது. இவ்வாறு பயனற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். 

காலை நேரத்தில் கொசுமருந்து தெளித்து கொசுவை ஒழிக்க வேண்டும். வீடுகளுக்கு முன் சாக்கடையை தேங்கவிடக்கூடாது தேங்கி நிற்கும் சாக்கடை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு கொசு உற்பத்தியை தடுக்க ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com