ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டுகோள்

பல்லடம் சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் பி.ஏ.பி., பாசன வசதி கிடையாது. நிலத்தடி நீரும் அதல பாதாளத்தில் சென்றுவிட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளதா? என்று உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களின் பிரதான பாசன திட்டமாக பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் (பி.ஏ.பி.,) உள்ளது. பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன்  கால்நடை பராமரிப்பு, கறிக்கோழி உற்பத்தி மற்றும் பொதுமக்களின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. 

திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரின்றி வறட்சியில் உள்ளன. குறிப்பாக பல்லடம் சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் பி.ஏ.பி., பாசன வசதி கிடையாது. நிலத்தடி நீரும் அதல பாதாளத்தில் சென்றுவிட்டது. 

இதைக்கருத்தில் கொண்டே ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வருகிறோம். முந்தைய காலங்களில் கிடப்பில் போடப்பட்ட இத்திட்டத்தை நிறைவேற்றி பாசன பகுதிகளை விரிவுபடுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சிக்காலத்தின் போது கேரள அரசுடன் பேச்சு நடத்தப்பட்டு வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது. திட்டத்தின் தற்போதைய நிலவரம், செயல்படுத்த ஆகும் காலம் குறித்து தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com