கோவில் நிலங்கள் மீட்பு - பூசாரிகள் பாராட்டு

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம்:

கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கைக்கு பூசாரிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் பல ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து வருகின்றன. தமிழக அரசு, அறநிலையத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு வருவது பாராட்டுக்கு உரியது. 

அறநிலையத் துறையின் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோவில்களின் மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை வழங்கும் உயர்நிலை ஆலோசனைக் குழு கூட்டம், அறநிலையத்துறை வளாகத்திலேயே நடந்தது சிறப்புமிக்கது. அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கையை பூசாரிகள் நல சங்கம் வரவேற்கிறது என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com