ரங்கநாதபுரம் கிளை தபால் நிலையத்தை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் - அனுமன் சேனா வலியுறுத்தல்

ரங்கநாதபுரம் தபால் நிலையத்தை மூத்த குடிமக்கள் உட்பட பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவிநாசி:

அவிநாசியில் உள்ள ரங்கநாதபுரம் கிளை தபால் நிலையத்தை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அனுமன் சேனா மாநில செயலாளர் தியாகராஜன், கோவை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கு அனுப்பியுள்ள மனுவில், ரங்கநாதபுரத்தில் தற்போது இயங்கும் கிளை தபால் நிலையத்தை, அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட அவிநாசி தலைமை தபால் நிலையத்துடன் இணைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரங்கநாதபுரம் தபால் நிலையத்தை மூத்த குடிமக்கள் உட்பட பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த தபால் நிலையத்தை மூடி, இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com