தென்னம்பாளையத்தில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கை தமிழக அரசு ரத்து செய்தது.
தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில்  மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
Published on

திருப்பூர்:

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களாக அமல்படுத்தப்பட்டு வந்தது.

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கை தமிழக அரசு ரத்து செய் தது.தொழில் நகரமான திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களுக்கு விடுமுறை தினம் ஆகும். முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று காலை தென்னம்பாளையம் சந்தையில் மீன் வாங்க மீன்பிரியர்கள் பலரும் குவிந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com