மகப்பேறு மருத்துவமனையை கொரோனா வார்டாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியல்

மகப்பேறு மருத்துவமனையை தற்போது கொரோனா வார்டாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மாநகராட்சி எல்.ஆர்.ஜி.ஆர். மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்குஅப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், பிரசவமும் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அந்த மருத்துவமனையை தற்போது கொரோனா வார்டாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும் கொரோனா வார்டாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து மருத்துவமனை முன்பு இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com