வியாபாரிகள், பொதுமக்களை அச்சுறுத்தும் தனியார் நிதி நிறுவனங்கள் - காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு கண்டனம்

சட்டமீறல்களில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது கந்துவட்டி தடை சட்டத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலத் தலைவர் எஸ்.வி பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
மாநிலத் தலைவர் எஸ்.வி பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
Published on

திருப்பூர்:

காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.வி பூமிநாதன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எம். சிவனேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை குண்டர்களை ஏவி தகாத வார்த்தைகளில் பேசுவது கொலை மிரட்டல் விடுவது என்பது தமிழகத்தில் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. 

மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் கடன் பெற்றுள்ள பெண்களை பெண்கள் என்று கூட பாராமல் இதுபோல் குண்டர்களை வைத்து தகாத வார்த்தைகள் பேசுவது அவர்களின் வீட்டுக்கேசென்று மிரட்டுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதனால் பல வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆகவே தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை இதுபோன்ற சட்ட மீறல்களில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது கந்துவட்டி தடை சட்டத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் பாலமுருகன், மாநில துணைச் செயலாளர் விஜயராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் வேலாயுதம், மாநில இளைஞரணி செயலாளர் முத்து, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சதீஷ் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மைக்கேல், சேர்மராஜ், சரத்கண்ணன், முருகேசன், பொன்சேகர், முருகேஷ், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ஆரோக்கிய ராஜேஷ், ராசு, சேலம் மாவட்ட நிர்வாகிகள் துரை, நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், கிருஷ்ணகுமார், பாலமுருகன், சிவா மற்றும் நெல்லை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் உள்பட பல மாவட்ட நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளராக துரைசாமி, மாநில இணைச்செயலாளராக பாலம்பட்டி துரை, கோவை மாவட்ட இளைஞரணி தலைவராக சாமுவேல் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com