தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடுகள் தீவிரம்

100க்கும் மேற்பட்ட பல்வேறு துறை தனியார் நிறுவனங்கள், இதில் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து திருப்பூர் மாநகராட்சி சார்பில் அடுத்த மாதம் சிக்கண்ணா கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

100க்கும் மேற்பட்ட பல்வேறு துறை தனியார் நிறுவனங்கள், இதில் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளன. இதன் வாயிலாக மாவட்டத்தைச்சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐ.டி., நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள், என்ஜினீயரிங் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள், மில்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், வருமான வரிக்கணக்காளர்கள், மார்க்கெட்டிங் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.முகாமை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்வது குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் வேலை வாய்ப்பு தேடுவோர் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பெருமளவில் இதில் பங்கேற்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com