பவர்டேபிள் கட்டண உயர்வு - 4வது சுற்று பேச்சுவார்த்தை இன்று மாலை நடக்கிறது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக 4-வது சுற்று பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

பவர்டேபிள் கட்டண உயர்வு நிர்ணயிப்பதற்கான 4-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று மாலை நடக்கிறது. திருப்பூர் ஆடை உற்பத்தியாளர் தரப்பில் சைமா’ சங்கமும், தையல் நிறுவனங்கள் தரப்பில் பவர்டேபிள் உரிமையாளர் சங்கங்கள் இப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

முதல் ஆண்டு 30 சதவீதம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 15 சதவீதம் என மொத்தம் 75 சதவீதம் கட்டண உயர்வு கோரிக்கையை முன்வைத்துள்ளது பவர்டேபிள் சங்கம். இருதரப்பினரும் இதுவரை 3 சுற்று நேரடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக 4-வது சுற்று பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்ததால் மீண்டும் பேச்சுவார்த்தை, ‘சைமா’ அரங்கில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும் என்பதில் இருதரப்பு சங்கத்தினரும் ஆர்வமாக உள்ளனர். அதனால் இன்றைய பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com