கோட்டமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை:

உடுமலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே அதுசமயம் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

அப்போது மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com